புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஃபிட் இந்தியா பள்ளி தர நிர்ணய முறையை பிரதமர் நரேந்திர மோடி 24ம் தேதி துவங்கி வைத்தார்.
ஃபிட் இந்தியா பள்ளி தரவரிசை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது – முதல் நிலை தரவரிசை கொண்ட ஃபிட் இந்தியா பள்ளிகள், ஃபிட் இந்தியா பள்ளி (3 நட்சத்திரம்) மற்றும் ஃபிட் இந்தியா பள்ளி (5 நட்சத்திரம்).
பள்ளி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உடற்தகுதிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் அந்நடவடிக்கைகளுக்கு ஏற்ற வசதிகளைப் பொறுத்து தரவரிசை நிலையானது நிர்ணயிக்கப்படுகிறது.
மோடி, 24ம் தேதியன்று, தனது பிரபலமான வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் இல், “ஃபிட் இந்தியா இயக்கத்தில், உடற்பயிற்சிக்கு ஏற்ப தரவரிசைப் பள்ளிகளுக்கான அட்டவணைகள் வரையப்பட்டுள்ளன. இந்த தரவரிசையை எட்டும் பள்ளிகளும் ஃபிட் இந்தியா லோகோ மற்றும் கொடியைப் பயன்படுத்த முடியும்“, என்று கூறினார்.
தரவரிசை முறையை விளக்கிய பிரதமர், “ஃபிட் இந்தியா போர்ட்டலைப் பார்வையிடுவதன் மூலம் பள்ளிகள் தங்களின் பொருத்தமான நிலையை அறிவிக்க முடியும். ஃபிட் இந்தியா மூன்று நட்சத்திரம் மற்றும் ஃபிட் இந்தியா ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளும் வழங்கப்படும்.
“அனைத்து பள்ளிகளும் ஃபிட் இந்தியா தரவரிசை அமைப்பில் சேர வேண்டும் என்றும், ஃபிட் இந்தியா நமது மனோபாவத்திற்கு இயல்பாக மாற வேண்டும் என்றும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். இது ஒரு வெகுஜன இயக்கமாக மாறி விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கு நாம் பாடுபட வேண்டும்” என்று மோடி மேலும் கூறினார்.