டெல்லி:
டெல்லி நீர்வளத்துறை அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தற்போதைய காவிரி நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
காவிரி நதி நீர் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. அதைத்தொடர்ந்து காவிரி ஒழுக்காற்றுக்குழு கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் திருச்சியில் கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த மாதக்கூட்டம் இன்று டெல்லியில் உள்ள நீர்வளத் துறை அமைச்சகத்தின் சேவா பவனில் இன்று காலை தொடங்கியது. காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.