டெல்லி:

றைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத் தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்பட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளான இந்திராகாந்தி, சுதந்திரஇந்தியாவின் மூன்றாவது பிரதமர். இந்தியாவின் இரும்பு பெண்மணியாக கருதப்படும் இந்திராகாந்தியின் ஆளுமை உலக நாடுகளையே வியக்க வைத்தது. வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தியவர்.

இன்று இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

[youtube-feed feed=1]