சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் குறிப்பாக கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யும். மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் வலிநோக்கத்தில் 1 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது.
சென்னயைில் அக்டோபர் 1ம் தேதி முதல் முதல் நவம்பர் 12ம் வரை 279 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இக்காலக்கட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 414 மி.மீ. ஆகும். எனவே, 33% குறைவாக மழை பதிவாகியுள்ளது. கோவையில், 335.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இக்காலக்கட்டத்தில் இயல்பாக 238.8 மி.மீ. மழை பதிவாகும். எனவே, 40% அதிகமாக மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.