சென்னை:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் போலி ரசீதுகள் மூலம் ரூ. 3ஆயிரத்து 300 கோடி ஹவாலா மோசடி நடைபெற்று உள்ளது தெரிய வந்துள்ளதாகவும், இந்த மோசடியில் 42நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்றும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்து உள்ளது.
கட்டுமானம் உள்பட உள்கட்டமைப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் கடந்த மத்திய நேரடி வரி வசூல் வாரியம் அதிரடி சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை தமிழ்நாட்டில் ஈரோடு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஈரோடு, புனே, ஆக்ரா மற்றும் கோவாவில் உள்ள 42 இடங்களில் நடைபெற்றது. இதில், அந்த நிறுவனங்கள், போலி பில்கள் மூலம் ஹவாலா மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தச் சோதனையில் பல்வேறு நிறுவனங்கள் போலியான ஒப்பந்தங்கள், போலியான ரசீதுகள் மூலம் ஹவாலா மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சுமார் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிற்கு ஹவாலா மோசடி நடந்துள்ளதாக வருமான வரித்துறையினர் சோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் கணக்கில் காட்டப்படாத 4 கோடி ரூபாய் பணமும், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கு நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.