மும்பை

பில்தேவ் வாழ்க்கைக்கதையில் நடிக்கும் ரன்வீர் சிங் ஒற்றைக் கால் தூக்கி பேட் செய்யும்  நடராஜ் ஷாட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கைக் கஹை 83 என்னும் பெயரில் உருவாகி வருகிறது.   அந்த வருடம் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முதலாக உலகக்கோப்பையை வென்றது.   இந்த படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவ் ஆகவும் தீபிகா படுகோன் கபில்தேவின் மனைவி ரோமி ஆகவும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் சாகுப் சலீம், ஆதிநாத் கோத்தாரி, ஹார்டி சந்து, அம்மி விர்க், பஞ்கஜ் திரிபாதி, ஜத்தின் சர்மா உள்ளிட்ட  பலர் நடித்துள்ளனர்.  வரும் 2009 ஆம் தேதி ஏப்ரல் மாதம் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் அச்சு அசலாக கபில் சாயலில் உள்ளதாகப் பலரும் தெரிவித்டுள்ளனர்.   இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கபில்தேவின் பிரபல ஷாட்டான ஒரு காலை தூக்கி அடிக்கும் நடராஜ் ஷாட் போஸில் ரன்வீர் சிங் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க கபில்தேவ் ரன்வீர் சிங்குக்கு பயிற்சி அளித்துள்ளார்.

[youtube-feed feed=1]