
மும்பை: இனிவரும் ஆண்டுகளில் ஐபிஎல் தொடர்களில் துவக்க விழா நிகழ்வு நடைபெற வாய்ப்பில்லை என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு முதல் கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. சினிமா ஸ்டார்கள் மற்றும் உலகளாவிய இசைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரை வரவழைத்து இந்த விழா பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது ஒவ்வொரு ஆண்டும்.
இந்த 2019ம் ஆண்டில் மட்டும் துவக்க விழாவிற்கு ரூ.30 கோடிகள் செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, ரசிகர்கள் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டாத இந்த துவக்க விழா, இவ்வளவு பெரிய செலவில் எதற்காக நடத்தப்பட வேண்டுமென்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், பங்கேற்கும் பிரபலங்களுக்கும் அதிகளவு சம்பளத்தைக் கொட்டிக்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, துவக்கவிழாவை ரத்துசெய்வது குறித்து பிசிசிஐ அமைப்பு யோசித்து வருகிறது என்றும், அதுதொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.
[youtube-feed feed=1]