சமஸ்திபூர்
பீகார் மாநிலம் சமஸ்திபூர் நகரில் ஒரு கோவிலில் இன்று நடந்த சாத் பூஜையின் போது சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மரணம் அடைந்தனர்.

தற்போது வட இந்திய மாநிலங்களில் சாத் பூஜை என்னும் ஒரு பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜை சூரியனுக்கு நன்றி தெரிவிக்க நடத்தப்படுகிறது. நீர்நிலைகளிலும் கோவில்களிலும் மக்கள் திரள் திரளாகக் கூடி பூஜை செய்து சூரியனை வழிபடுவது வழக்கமாகு. இந்த பூஜை பீகார் மாநிலத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று காலை பீகார் மாநிலம் சமஸ்திபூர் நகரில் ஒரு கோவிலில் பூஜை நடந்தது. இந்த கோவில் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. எனவே கோவில் ஓரமாக நின்று பலரும் பூஜை செய்துக் கொண்டு இருந்தனர். ஏராளமான பக்தர்கள் கூடியிருந்த வேளையில் இந்த கோவிலின் சுவர் திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
இந்த விபத்தில் இரு பெண்கள் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். பீகாரின் முக்கிய விழாக்களில் ஒன்றான சாத் பூஜையின் போது இந்த விபத்து நடந்தது மக்களை மிகவும் கவலைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
[youtube-feed feed=1]