அன்பார்ந்த பத்திரிக்கை.காம் வாசகர்களே, முதலில் நாம் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாதகம், விசுத்தி ஆகியவற்றைப்பார்த்திப்பார்த்தோம். 6வது சக்கரமாகிய சுழி முனை அல்லது ஆக்கினை சக்கரம் பற்றி இப்போது பார்ப்போம்.

குண்டலினி யோகத்தில் சக்தியை புருவமத்தியில்  மனம் வைத்து தவம் செய்யும் சக்கரமாகும். நெற்றிக்கண், ஞானக்கண், புருவப்பூட்டு , God spot என்று ஞானிகளால் குறிப்பிடப்படுகிறது

ஆக்கினியை சித்தர்கள் புருவங்கள் இரண்டும் கூடும், முச்சந்தி வீடு என்று உவமைப்பொருளாக குறிப்பிடுகிறார்கள். இது தீட்சை முறையில் குரு சீடனுக்கு மூலாதாரத்தில் இருந்து கைவிரல்கள் மூலம் தொட்டு உணர்த்திமுற்காலத்திலும், இக்காலத்திலும் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

புருவமத்தியில் உயிராற்றலை உணர்ந்து ஐம்புலங்களை அடங்கி உயிர்மீது மனம் வைத்து பிரத்யாகாரம், தாரணா , தியானம், சமாதி என்ற நிலையைஆக்கினை தவத்தின் மூலம் அடையலாம்.

அறிவியல்

புருவமத்தியில் பிட்யூட்டரி என்ற நாளமில்லா சுரப்பி இருக்குமிடமாக ஆக்கினை சக்கரம் திகழ்கிறது. இது அனைத்து சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் சுரப்பதியாகவும் திகழ்கிறது. ஆக்கினை சக்கரத்தில் மனம் வைத்து தவம் செய்யும்போது மனமானது அமைதியடைந்து மன அலைச்சுழல் குறைகிறது. இந்த நிலைக்கு ஆல்பா நிலை என்று குறிப்பிடுகிறார்கள் அறிவியல் வல்லுநர்கள். ஒரு விநாடிக்கு 8ல் இருந்து 13 அலைச்சுழல் குறைகிறது.

மனிதன் அமைதியற்ற நிலையில் பீட்டா அலைச்சுழல் 13 ல் இருந்து 50 அலைச்சுழல் வரை இருக்கும். இது உடல் நிலையையும் மனநிலையைம் பாதிப்பு ஏற்படுத்தும்.

பயன்கள்

முக்காலமும் உணரும் தன்மை (திரிகால ஞானம் ) கிடைக்கும்.
ஞானதிருஷ்டி, Time Theory கடந்த காலத்திற்கு பின்னோக்கிச்சென்று யூகிக்கும் தன்மை, மற்றும் எதிர்காலத்தில் நடப்பதை முன்கூட்டியே உணரும் தன்மை, நிகழ்காலத்தில் தன் பணிகளை ஒருங்கிணைத்து செய்தல்

மனிதனின் தீய ஆறு குணங்களான கோபம், பொறாமை, வஞ்சம், சதிசெயல், பழி வாங்குதல், துரோகம் ஆகியவை மாற்றம் பெறும். இவை நற்குணங்களான கருணை, அன்பு, ஈகை, தியாகம், தர்மம், தயவு ஆகிய  மாற்றி சமுதாயத்தில்  சிறந்த விளங்க  வழி செய்கிறது
மூளையில் உள்ள நியூரான்கள் அதன் செயல்திறன்களை நன்கு ஊக்கப்படுத்தப்படுகிறது
இதனால் ஒருங்கிணைத்தல் , அறிவுக்கூர்மை, விழிப்பு நிலை, தேவையற்ற புலன்களின் மீது மனம் செலுத்துதலை கட்டுப்படுத்துகிறது.

ஆக்கினை தவத்தால் மனதுக்கு ஒருமை நிலையும், அமைதியும் , ஜீவகாந்த ஆற்றல் அதிகரிக்கச்செய்து நோயின்றி நீண்ட நாள் வாழ உதவுகிறது. இதை பல்வேறு சித்தர்கள் அனுபவமாக உணர்ந்து நமக்கு சொல்லியிருக்கிறார்கள்

ஆக்கினை பற்றி மூத்தோர் பாடல்கள்

“இருவிழிகள் மூக்கு முனை குறிப்பாய் நிற்க,
எண்ணத்தைப் புருவங்களிடை நிறுத்தி,
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது.
உள்ளொளியே பூரித்து மூலமான

கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்.
கருத்துக்கு இந்நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்று
அருவ நிலையாம் ஆதி உருவாய் வந்த
அத்துவித இரகசியமும் விளக்கமாகும்

                      – வேதாத்திரி மகரிஷி

“காரப்பா நரம்பென்ற விழுதுவட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுமுனையாச்சு”

                         – காகபுஜண்டர்

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துக்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்

                           – பத்திரகிரியார்

கையறவிலாது நடுக்கண் புருவப் பூட்டு
கண்டு களி கொண்டு திறந்துண்டு நடுத நாட்டு
ஐவர்மிக ருய்யும்வகை யப்பர் விளையாட்டு
ஆடுவதென்றே மறைகள் யாடுவது பாட்டு

                                            – வள்ளலார்

கற்கும் முறை

பிராணயாமப் பயிற்சி
வாசி யோகம்
மந்திர உபாசனை
வேதாத்திரி மகஷரியின்  எளிய முறை குண்டலினி பயிற்சி
ஆகியவற்றின் மூலம் ஆக்கினை தவத்தினைக் கற்றுக்கொள்ளலாம்

மருத்துவர்  பாலாஜி கனகசபை,MBBS, PhD (Yoga)
அரசு மருத்துவர்
99429 22002
கல்லாவி
கிருஷ்ணகிரி மாவட்டம்