திருச்சி:

மிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ள தமிழக போக்குவரத்துத் துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்று முன்பணம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 8 கோட்டங்களில் பணியாற்றிவரும் 1.36 லட்சம் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவதற்காக முதல்வர் பழனிசாமி ரூ.206.52 கோடி நிதி ஒதுக்க உத்தரவிட்டு இருப்பதாகவும்,  அக்.24-ம் தேதி (நாளை) முதல் போனஸ் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி,  அதிகபட்சமாக ரூ.16,800 போனஸாக கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், . தீபாவளி பண்டிகைக்கான முன்பணம் ரூ.10 ஆயிரம் இன்று வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்க ரெகுலராக இயக்கப்படும் பேருந்து உடன் சேர்த்து 21,586 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்காக போக்குவரத்து துறை தயார் நிலையில் உள்ளது.

குறைந்த தூரம் செல்லக்கூடிய குளுகுளு வசதி கொண்ட பேருந்துகள் 8 போக்குவரத்து கழகங்களிலும் விரைவில் இயக்கப்படும்.

பதிவு செய்த பிறகு படிப்படியாக 150 பேருந்துகள் கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் ஏசி கட்டணத்துடன் விரைவு பேருந்துகளில் உள்ள வசதியைபோல சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் இயக்கப்பட இருக்கிறது

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்து புகார் அளிக்க டோல் ஃப்ரீ தொலைபேசி எண் தெரிவிக்கப்படும். அதில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக  சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி மற்றும் ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட 9 போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள் தீபாவளி போனஸ் மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்தாததற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.