திருப்பதி

திருப்பதி திருமலை தேவஸ்தான வாடகை அறைகள் நன்கொடையாளர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி அன்று வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆங்கில புத்தாண்டு 2020ம் ஆண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி, துவாதசி உள்ளிட்ட உற்சவ நாட்களை முன்னிட்டு திருமலையில் நன்கொடையாளர்கள் மற்றும் அவர்களின் பரிந்துரை கடிதங்களுக்கு வாடகை அறை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

விசேஷ தினங்களில் திருமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். என்பதால் 2019ஆம் ஆண்டு டிச.30, 2020ம் ஆண்டு ஜன.1, ஜன.4 முதல் ஜன.7ஆம் தேதிகளில் நன்கொடையாளர்களுக்கு வாடகை அறை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்காகத் தேவஸ்தான இணையதளத்தில் உள்ள படிவங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, நன்கொடையாளர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனத் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.