மதுரை:

துரை மத்திய சிறையில் கைதிகள் மொபைல்போன் மற்றும் சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபடுவதாக எழுந்த தகவலைத் தொடர்ந்து, மதுரை  சரக சிறைத்துறை துணை தலைவர் தலைமையில் கண்காணிப்பாளர் முன்னிலையில் இன்று அதிகாலைமுதல் அதிரடி சோதனை  மேற்கொள்ளப்பட்டது. இதில், பல மொபைல்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மதுரை மத்திய சிறைக்கு  இன்று காலை 6 மணி அளவில் வந்த மதுரை  சரக சிறைத்துறை துணை தலைவர்  மற்றும்  உதவி ஆணையர் வேணுகோபால், 2 காவல் ஆய்வாளர்கள், 16 உதவி ஆய்வாளர்கள் , 16சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 88 ஆண் மற்றும் பெண் காவலர்கள் மற்றும் சிறைக்காவலர்கள் மற்றும் அலுவலர்கள், சிறை அலுவலர்,, துணை சிறை அலுவலர் , உதவி சிறை அலுவலர், முதல் தலைமைக் காவலர், என 100க்கும் மேற்பட்ட காவலர்கள் சிறையில் உள்ள அனைத்து ஆண் கைதிகள் மற்றும் பெண் கைதிகளின் அறைகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  பெண்கள் தனி சிறையில் பெண் காவலர்கள் சோதனை செய்தனர்.

இந்த அதிரடி சோதனையில், பல செல்போன்கள், மற்றும் ஏராளமான சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://youtu.be/aeRUNbQahmc

-பொதிகை குமார்