மும்பை

பிசிசிஐ தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள சவுரவ் கங்குலியிடம் ரவி சாஸ்திரி பற்றிக் கேட்டதற்கு அவர் பதில் கேள்வி கேட்டுள்ளார்.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி கடந்த திங்களன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார், வேறு யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.    கடந்த செவ்வாயன்று, தனது புதிய அணியுடன் ஒரு படத்தை ட்விட் செய்துள்ளார். பிசிசிஐயின் முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர், கங்குலி தலைவர் ஆவதற்கு முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது இருந்தே, ​​சவுரவ் கங்குலியும், ரவி சாஸ்திரியும் நேருக்கு நேர் எப்போதும் சந்திக்கவில்லை.. அத்துடன் மூன்று  உறுப்பினர்களைக் கொண்ட உயர் ஆற்றல்மிக்க கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) ஒரு பகுதியாக இருந்த சாஸ்திரி மற்றும் கங்குலி ஆகியோர், முரண்பட்டிருந்தனர்.

முன்பு ஒருமுறை பேட்டியின் போது கங்குலி இல்லாததைக் கேள்விக்குட்படுத்தி ரவி சாஸ்திரி பிரச்சினையைத் தூண்டினார். அதற்கு சாஸ்திரி ஒரு “முட்டாளின் சொர்க்கத்தில்” வாழ்கிறார் என்று கூறி கங்குலி பதிலளித்தார்.

தற்போது  பி.சி.சி.ஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்பதால் சாஸ்திரியின் எதிர்காலம் என்ன என்பது பலர் மனதில் கேள்வியாக உள்ளது.

சமீபத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​கங்குலியிடம் ரவி சாஸ்திரியிடம் பேசியிருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு அவர் அளித்த பதில் வைரலாகி உள்ளது.  இந்தக் கேள்விக்கு. “ஏன்? இப்போது அவர் என்ன செய்திருக்கிறார்?” என்று சிரித்துக் கொண்டே கங்குலி பதில் கேள்வி எழுப்பி உள்ளார்.