வாஷிங்டன்
தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு ரகசிய இணையம் மூலம் குழந்தைகள் பாலியல் வீடியோவை பகிர்ந்த விவகாரத்தில் உலகெங்கும் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தைகள் பாலியல் வீடியோக்களை காண்பதில் பலர் மகிழ்ச்சி அடைகின்றனர். இது ஒருவகை மனப்பிழை எனப் பல மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆயினும் இந்த பழக்கம் மக்களிடையே தொடர்ந்து வருகிறது. உலகெங்கும் உள்ள பல நாடுகளில் குழந்தைகள் பாலியல் வீடியோ பதிவுகளைக் கொண்ட பல இணைய தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆயினும் இந்த இணைய தளங்கள் ரகசியமாக இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன்,மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் இத்தகைய தளங்கள் இயங்குவதாகக் கூறப்பட்டன. எனவே இதையொட்டி இந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் பல ரகசிய விசாரணைகள் நடத்தி உள்ளன. அந்த விசாரணையில் தென் கொரியாவில் இருந்து இந்த தளம் இயங்குவது தெரிய வந்தது.
வெல்கம் டு வீடியோ என பெயரிடப்பட்டுள்ள இணைய தளத்தை ஆய்ந்த அதிகாரிகள் இதில் சுமார் 2.5 லட்சம் குழந்தைகள் பாலியல் வீடியோ உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இதில் பல வீடியோக்களில் சிறு குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த இணைய தளங்களில் பிட் காயின் போன்ற இணையப் பணத்தின் மூலம் பலர் சந்தா செலுத்தி உள்ளனர்.
இந்த இணையதளத்தின் உரிமையாளரான தென்கொரியாவைச் சேர்ந்த ஜாங் ஊ சொன் என்பவரின் கீழே 12 நாடுகளில் உள்ள 337 பேர் இயங்கி வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]