
ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷெராஃப் நடித்த “வார்” படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது.
இந்த படம் வெளியாகி நேற்றுடன் 13 நாட்களை கடந்து விட்டது. இதுவரை வார் படம் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
உலக முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 406.5 கோடியை எட்டியுள்ளது. (இந்தியா வசூல் 332 கோடி + வெளிநாடு வசூல் 79.5 கோடி).
இந்த படத்தின் தயாரிப்பாளர் யஷ் ராஜ் பிலிம்ஸ் அளித்த தகவலின் படி, திங்களன்று இந்தியாவில் “வார்” படம் நல்ல வசூலை செய்துள்ளது. அதாவது 13 வது நாளன நேற்றும் 4.75 கோடி (இந்தி – 4.40 கோடி மற்றும் தமிழ், தெலுங்கு – 0.35 மில்லியன்) வசூல் ஆகியுள்ளது. நாடு முழுவதும் இந்தியில் மட்டும் மொத்த வசூல் 276.40 கோடி வசூல் செய்துள்ளது.
Patrikai.com official YouTube Channel