சீமானுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆதரவாளர்களிடம் இருந்து பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா என்பத குறித்து விசாரித்து வருவதாக மலேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரவி தலைவர் அயூப்கான் மைதீன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரத்தின்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொலை செய்து புதைத்தது நாங்கள்தான் என்று என்று ஆணவகமாக பேசியிருந்தார்.
சீமானின் பேச்சு காங்கிரசாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்மீது இரண்டு பிரிவின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், சீமான் மலேசியா வந்து சென்றிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக புக்கிட் அமான் தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் அயூப்கான் மைதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மைதீன், சீமான் பலமுறை மலேசியா வந்து பல அரசியல்வாதிகளை சந்தித்துச் சென்றுள்ளார். ஆனால், விடுதலைப்புலிகளுக்கு மலேசிய ஆதரவாளர்களிடம் இருந்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதில், சீமானின் பங்கு என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகின்றோம்.
ஏற்கனவே சீமான் மலேசிய வருகை குறித்து கடந்த 2012ம் ஆண்டு முதலே கண்காணித்து வருவதாக தெரிவித்த மைதீன், அவரது வருகையின்போது, தமிழீழ காரணத்திற்காக அனுதாபம் கொண்ட வி.ஐ.பி.க்களுடன் சந்திப்புகள் நடைபெற்றுள்ளது உறுதி சய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சீமான் மலேசிய நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது குறித்து பரிசீலிப்போம் என்றும் மலேசிய தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் அயூப்கான் மைதீன் தெரிவித்து உள்ளார்.
இதன் காரணமாக சீமானுக்கு விரைவில் மலேசியாவில் நுழைய தடை விதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.