மும்பை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியுஜிலாந்து வீரர் மைக் ஹெசன் பதவி வகித்து வந்தார். தற்போது அவருக்குப் பதிலாக இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   இவர் ஓய்வு பெற்ற பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் பணி புரிந்து வந்தார்.

தற்போது தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில் கும்ப்ளே பஞ்சாப அணியின் அனைத்து விவகாரங்களையும் கவனிப்பார் என அந்த அணியின் உரிமையாளர்களிலொருவரன மோகித் பர்மன் தெரிவித்துள்ளார்.   இது அனில் கும்ப்ளே வுக்கு மூன்றாவது ஐபிஎல் பதவி ஆகும்.  ஏற்கனவே இவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளில் பணி புரிந்தவர் ஆவார்.

தற்போது ஐபிஎல் அணிகளில் ஒரே இந்தியப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே உள்ளார்.  பஞ்சாப் அணியை இதுவரை 5 பயிற்சியாளர்கள் வழி நடத்தி உள்ளனர்.  இதுவரை இந்த அணி எந்த ஒரு ஐபிஎல் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை.  கடந்த 2014 ஆம் வருடம் இறுதிப்போட்டி வரை வந்த இந்த அணி கொல்கத்தா அணியிடம் தோல்வி அடைந்தது.