டில்லி

ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இன்று முதல் பயணிகள் விமானச் சேவை தொடங்க உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் நகருக்கு வெகு அருகே ஹிண்டன் விமானப்படை விமான நிலையம் அமைந்துள்ளது.   இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இந்த விமான நிலையம் டில்லி நகரில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.    தற்போது கடும் நெரிசல் காரணமாக மற்றொரு விமான நிலையம் அமைக்க விமானத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.

ஹிண்டன் விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை விமான நிலைய ஆணையம் ஏற்றுக் கொண்டது.  பயணிகள் விமானங்களின் ஒரு பகுதியை ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.    இன்று முதல் முதலாக ஹெரிடேஜ் ஏவியேஷன் நிறுவனத்தின் விமானச் சேவை தொடங்குகிறது.

வரும் நவம்பர் மாதம் முதல் சிம்லா, டேராடூன், ஹூப்ளி ஆகிய சுற்றுலா நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.  இந்த  விமான நிலையத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிபதி அஜய்சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.