சென்னை:

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிஜின்பிங் உச்சி மாநாடு இன்றும், நாளையும் தமிழகத்தின் புராதன நகரமான மாமல்லபு ரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு இடையே 129 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுதாகி உள்ளன.

உலகமே வியக்கும் வகையில், சீன அதிபர் வருகைக்காக தமிழகத்தில் அசத்தலான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  இன்று மதியம் சென்னை வரும் சீன அதிபருக்கு சென்னை விமான நிலையத்திலேயே பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து கிண்டியில் உள்ள  ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் சீன அதிபர் , பிற்பகல் கார் மூலம் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசுவிற்கு செல்லவுள்ளார். இங்குதான் நரேந்திர மோடி, ஸி ஜின்பிங் இடையேயான முதல் ‘மாமல்லபுரம்’ சந்திப்பு நடக்கவுள்ளது.

அங்கு கடற்கரை அருகிலுள்ள கிருஷ்ணா வெண்ணெய் பந்து பகுதியில் இருநாட்டுத் தலைவர்களும் சிறிது நேரம் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இருநாட்டுத் தலைவர்களும் ரதக் கோயில், கடற்கரை கோயில் ஆகியவற்றை பார்வையிட்ட பின்னர் கலாஷேத்திர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர். முதல்நாள் பயணத்தை முடித்துவிட்டு சீன அதிபர் மீண்டும் ஐ.டி.சி. கிராண்ட் சோழாவுக்கு சென்று அங்கு தங்கவுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் இடையேயான சந்திப்பு மாமல்லபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது.  இதனால், நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு

ந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக  இந்திய மற்றும் சீன நிறுவனங்களிடையே சுமார் 129 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சீனா மற்றும் இந்தியாவின் நெருங்கிய உறவுகளை எடுத்துரைத்த சீன பிரதிநிதிகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கங்கை நதியைப் போலவே நித்தியமானது என்று கூறினார்.

வேளாண் தொடர்பான பொருட்கள், தாதுக்கள், ஜவுளி, உணவு பதப்படுத்துதல், நூல்கள், தாதுக்கள் போன்ற துறைகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

தற்போது உலகம் முழுவதும் வர்த்தக சந்தை மோசமாகி உள்ள நிலையில், ​​இரு நாடுகளும் வர்த்தகத்தில் கவனம் செலுத்துகின்றன, இந்தியா தெற்காசியாவில் சீனாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும், மேலும் இந்திய நிறுவனங்கள் சீன சந்தையில் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ஒட்டுமொத்த முதலீட்டில் விரிவடைந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்திய சீன அதிபர் சந்திப்பின் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மேலும் விரிவடையும் என நம்பப்படுகிறது.

ஏற்கனவே, பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பைத் தொடர்ந்து,  இந்தியாவில் சீன முதலீடும் சீனாவில் இந்திய முதலீடும்   பல மடங்கு அதிகரித்துள்ளன. சீன தயாரிப்பு மொபைல் போன்களான சியோமி, ஒப்போ போன்றவை இந்தியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போதைய சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், மேலும் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.

\

இந்தியா-சீனா வர்த்தக கூட்டம் மற்றும் கையெழுத்திடும் விழா தலைநகர் டில்லியில் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் பேசிய மக்கள் குடியரசின் தூதரகத்தின் ஆலோசகர் ZHU சியாவோங் கூறுகையில்,

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் மொத்த சதவீதத்தில் 20 சதவீதம், சீனாவும் இந்தியாவும் வைத்துள்ளதாகவும்,  தற்போதைய 75 பில்லியன் டாலர் வர்த்தகத்திலிருந்து, இரு நாடுகளும் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை நோக்கி நகர்கின்றன என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய ன் வெளிநாட்டு வர்த்தகத் துறை துணை இயக்குநர் ஜெனரல் எல்.ஐ.யூ.சாங்யு,  இரு நாடுகளுக்கு இடைய யான பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பும் ஆழமடைந்து வருவதாக  கூறினார்.

சீன நிறுவனங்கள் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா’ மூலோபாயத்திற்கு சாதகமாக பதிலளித்துள்ளன, மேலும் இந்தியாவில் அவர்களின் முதலீடு 8 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது என்று கூறியவர்,  “அடுத்த 15 ஆண்டுகளில், சீனா 30 டிரில்லியன் டாலர் பொருட்களையும் 100 பில்லியன் டாலர் சேவையையும் உலகிலிருந்து இறக்குமதி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உலகில் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இரண்டு பெரிய வளரும் நாடுகளாக, சீனாவும் இந்தியாவும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.