டில்லி:
சீன அதிபர் ஜிஜின்பிங் இந்தியா வருகை தர உள்ளதை இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சீன அதிபர் ஜிஜின்பிங் வரும் 11, 12-ம் தேதிகளில் இந்திய வருகிறார். அப்போது, பிரதமர் மோடியுடன் தமிழகத்தின் புராதன நகரமான மாமல்லபுரத்தில் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். மேலும் அங்குள்ள சிற்பங்களையும் சுற்றி பார்க்கிறார்கள். சென்னை வரும் சீன அதிபர், இந்திய பிரதமரின் பயணத்தையொட்டி சென்னை, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீன அதிபர் ஸி ஜின்பிங் வரும் 11, 12-ஆம் தேதிகளில் இந்திய வருவார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் நட்பு ரீதியான பயணமாக அக்டோபர் 11,12ஆம் தேதிகளில் இந்தியா வருகை தருகிறார். அப்போது, பல்வேறு துறைகளில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் விவாதிக்கவுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சீன அதிபர் வருகையையொட்டி, மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாமல்லபுரம் பகுதியில் 2 கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.