ஆப்கானிஸ்தான்
ஓராண்டுக்கு முன்பு தாலிபான்களால் கடத்தப்பட்ட மூன்று இந்தியப் பொறியாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பாக்லேன் மாநிலத்தில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் பல வெளிநாட்டுப் பொறியாளர்கள் பணி புரிந்து வந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் மூன்று இந்தியர்களையும் வேறு சில நாட்டினரையும் தாலிபான்கள் கடத்திச் சென்றனர். கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக இவர்கள் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர்.
இவர்களுக்குப் பதிலாக தங்கள் அமைப்பைச் சேர்ந்த 11 பேரை விடுவிக்க வேண்டும் என தாலிபான்கள் தெரிவித்தனர். இதையொட்டி பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. தற்போது பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு உண்டாகி உள்ளது. இதனால் தாலிபான்கள் மூன்று இந்தியப் பொறியாளர்கள், ஒரு அமெரிக்கப் பொறியாளர், ஒரு ஆஸ்திரேலிய பொருளாளர் என ஐந்து பேரை விடுவித்துள்ளனர்.
தற்போது ஆப்கானிஸ்தானில் அமைதி நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர் விடுதலை செய்யப்பட்ட பொறியாளர்களைத் தாலிபான்கள் அமெரிக்க ராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் விரைவில் தங்கள் நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
[youtube-feed feed=1]