வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் ஆதரவோடு, இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் (ICAF) நடத்தி வரும் 17 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெற உள்ளது.
இவ்விழாவின் போஸ்டர் மற்றும் லோகோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிலிம் சேம்பரில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தேர்வாகியுள்ள திரைப்படங்கள் தேவி, தேவிபாலா, அண்ணா, காசினோவா, ரஷ்யன் கலாச்சார கழகம் மற்றும் தாகூர் அரங்கத்தில் திரையிடப்பட இருக்கிறது.
தமிழ் திரைப்பட போட்டிக்கான மொத்த பரிசு தொகை ரூ.6 லட்சமாகவும், இளம் சாதனையாளர் விருதுக்கு ரூ.1 லட்சமாகவும் இருக்கும்.