சென்னை:

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில், அதிகாரிகள் துணை இல்லாமல் ஆள்மாறாட்டம் நடை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்று கூறிய  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய தேர்வு முகமை, மத்திய மனிதவள மேம்பாடு துறையையும் இணைத்து உத்தரவிட்டனர்.

மேலும் நீட் ஆள்மாறாட்டம்  தொடர்பான அறிக்கையை வரும் 15ந்தேதிக்குள் தாக்கல் செய்யவும் சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

நீட் தேர்வில் உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் மேலும் பல மாணவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடு வாழ் இந்தியர் களுக்கான 207 ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாததால் அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகச் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீரன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவைச் செப்டம்பர் 27ம் தேதி விசாரித்த நீதிபதிகள் வேல்முருகன், கிருபாகரன், இது தொடர்பாக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எத்தனை மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈட்டுபட்டுள் ளனர், எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இவ்விவகாரத்தில் ஒரே ஒரு இடைத்தரகருக்குத்தான் தொடர்புடையது என்று கூறுவதை நம்ப முடியவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள் அதிகாரிகளின் துணை இல்லாமல் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  மற்றும் நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை ஆகியவற்றையும் வழக்கில் இணைந்த நீதிபதிகள்,  இந்த ஆள்மாறாட்டம் மோசடியில், கல்லூரி நிர்வாகமும்  ஈடுபட்டுள்ளது.எந்தவொரு அரசு அதிகாரியின் ஒத்துழைப்பு இல்லாமல், ஒரு மாணவர் தனது தேர்வை எழுத மற்றொரு நபரை உருவாக்குவது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது,” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கில் நான்கு மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ஆள்மாறாட்டம் செய்பவர்களை ஏற்பாடு செய்து மாணவர்களிடமிருந்து பெரும் தொகையை எடுத்த இரண்டு முகவர்கள் பெருமளவில் உள்ளனர்.

ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து அக்டோபர் 15ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டனர்.