மதுரை:
புதுச்சேரியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடை பிரதமர் உள்பட அனைவருக்கும் பொருந்தும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் பிரதமர் மோடி, சீன பிரதமர் வருகையை வரவேற்று பேனர் வைக்க தமிழகஅரசு அனுமதி கோரியதும், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த நாராயணசாமி, புதுச்சேரியில் விதிக்கப்பட்டுள்ள பேனர் தடை, பிரதமர் உட்பட அனைவருக்கும் பொருந்தும் என்றார். பதாகைகள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நாராயணசாமி கூறினார்.
Patrikai.com official YouTube Channel