சென்னை:

தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக,  சென்னையில் 4 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் 5 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் கூறினார்.

தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு வரும்  24 முதல் 26-ம் தேதி வரை  தமிழக போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதன்படி சென்னையில் இருந்து 4,265 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 12 ஆயிரத்து 575 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் இருந்து புறப்படும் சிறப்பு பேருந்துங்கள்  மாதவரம், கே.கே. நகர், பூவிருந்தவல்லி, தாம்பரம் மெப்ஸ் மற்றும் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது.

வரும்  7 ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன் பதிவு வரும் 3 ஆம் தேதி முதல் தொடங்கம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 7 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாகவும் அதில் 2 லட்சம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.