டில்லி

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ பி சைனி ஓய்வு பெற்றதை ஒட்டிய சிறப்புச் செய்தி இதோ

கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் ஓ.பி.சைனி.  சைனி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது 29 ஆண்டுக்கால பணிக்காலத்தில் பல முக்கிய வழக்குகளுக்குத் தீர்ப்பளித்துள்ளார்.   பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த சைனியின் ஆரம்பக்கால வாழ்க்கை காவல்துறை என்ற புள்ளியிலிருந்து தொடங்குகிறது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓ.பி.சைனி, 1980-களில் டெல்லி காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற `Judicial services’ தேர்வில் வெற்றிபெற்று நீதிபதியானார்.

ஓ பி சைனி  பல  அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் தொடர்புடைய 2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் ஆவார்   உச்சநீதிமன்ற . நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிட்டது. அவ்வாறு இந்த வழக்குக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்ற நீதியாகத் தேர்வு செய்யப்பட்டவர் சைனி.   சுமார் 6 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் ராஜா, கனிமொழி இருவரையும் விடுவித்து ஓ.பி.சைனி தீர்ப்பளித்தார்.

அத்துடன் செங்கோட்டை தாக்குதல் வழக்கில் அவர், லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) பயங்கர வாதியான முகமது ஆரிஃபுக்கு மரண தண்டனை வழங்கினார். பிறகு இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.  கடந்த 2002 ஆம் ஆண்டு நீதிபதி எம்.எஸ். சபர்வால் ஓய்வு பெற்றதையடுத்து, சைனி அமர்வுக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.    இந்த வழக்கு 5 வழக்குகள், 300 சாட்சிகள் எனச் சிக்கல் நிரம்பியதாக இருப்பதால் இதை விசாரிக்க முடியாது’ என  ஏற்கனவே இரு நீதிபதிகள் மறுத்த நிலையில், செங்கோட்டை வழக்கு விசாரணையை ஓ.பி.சைனி மேற்கொண்டார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க  இந்தத் தீர்ப்பால் நீதிபதி ஓ.பி.சைனி தேசிய அளவில் கவனம் பெற்றார்.  இந்த தீர்ப்புக்கு பிறகு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்ததால், ஓ.பி.சைனிக்கு ஒய் பிரிவு மத்திய தொழில்படை பாதுகாப்புப் பிரிவு காவல்துறையின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. நேற்றுடன் ஓ.பி.சைனி இந்த பரபரப்பு நீதிமன்ற பணியில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.