சென்னை:

பிரபலமான சென்னை ஐஐடியில் நடைபெறும் விழாவில் கலநதுகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழர்களின் காலை உணவான  இட்லி, தோசை, சாம்பார் போன்ற உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை என்றும், தமிழகம் தனக்கு பிடிக்கம் என்று புகழாரம் சூட்டினார்.

சென்னை ஐஐடி-யின் 56-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடி, தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில்  “இந்தியா-சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019′ என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது, ஹேக்கத்தான் போட்டி முடிவுகள் பற்றி கவலைப்படாமல் திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்த மோடி,  என்னைப் பொறுத்தவரை இங்கு கூடியிருப்பவர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என்று தெரிவித்தார். இங்கு வந்திருக்கும் அனைத்து இளைஞர்களையும் வாழ்த்துகிறேன் என்றும் கூறினார்.

மேலும்,  ஹேக்கத்தான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தவர், சிங்கப்பூரை போல, பிற ஆசிய நாடுகளுடன் இணைந்து ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த ஆலோசனை கூறினார்.

தொடர்ந்து தமிழகம் குறித்து பேசத் தொடங்கிய மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறப்பானது என்றவர் தமிழகத்தின் உணவுகளான இட்லி, சாம்பார், வடை  குறிப்பிட்டு பேசினார். அப்போது,  தனக்கு தமிழகம் ரொம்பப் படிக்கும் என்றும், சென்னையின் காலை உணவான இட்லி, தோசை, வடை ஆகிய உணவுகள் உற்சாகம் தரக்கூடியவை என்று புகழாரம் சூட்டினார்.

மேலும்,‘ சென்னை மிகச்சிறந்த கலாச்சாரம், மாபெரும் பாரம்பரியம், சிறந்த உணவு வகைகளை கொண்டது என்றும் சென்னை அருகே உள்ள  மாமல்லபுரம் மிகச்சிறந்த தொன்மையான சிற்பங்களை கொண்ட நகரம் என்றார்.

இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது என்றும் பேசினார்.

 

[youtube-feed feed=1]