டில்லி
ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான கால அவகாசத்தை மததிய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

வருமான வரியில் மோசடி செய்வதற்கும், கடன் ஏய்ப்பு போன்றவற்றுக்கும் ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் இயற்றியது.
இச்சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு பயனுற்றதாகிவிடும் என அரசு எச்சரித்து இருந்தது.
ஏற்கனவே 5 முறை இந்த இணைப்பிற்காக மத்திய அரசு காலக்கெடு அளித்தது. அப்படி இருந்தாலும் சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கால தாமதம் செய்து வந்தனர்.
இவ்வாறு இணைக்க செப்டம்பர் 30ம் தேதி இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது டிசம்பர் 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]