ஐதராபாத்: நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தியை தமது கட்சியில் இணைத்துக்கொள்ள பா.ஜ. தலைவர்கள் மீண்டும் முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நடிகை விஜயசாந்தி தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். ஆனாலும், இப்போதைய நிலையில் தெலுங்கானாவில் அவருக்கு எந்த அரசியல் முக்கியத்துவமும் கிடையாது. இதனால் மீண்டும் சினிமாவில் முகம் காட்ட நினைத்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.
இந்நிலையில், தங்கள் கட்சியில் முன்பே இணைந்து பின்பு விலகிப்போன விஜயசாந்தியை மீண்டும் தங்களிடமே இழுத்துக்கொள்ள பாரதீய ஜனதா முயல்கிறதாம். தெலுங்கானாவை ஒட்டியுள்ள சில மராட்டியப் பகுதிகளில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்யவும், வரும் நாட்களில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வலிமை பெறவும் இந்தத் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாம் அக்கட்சி.
கேரளாவில் நடிகர் மோகன்லாலை வளைக்கிறதாம் அக்கட்சி. தமிழகத்தில் ஏற்கனவே ரஜினி விஷயம் நாம் அறிந்ததே. தற்போது தெலுங்கானாவில் ஏற்கனவே சற்று செல்வாக்குப் பெற்றுள்ள நிலையில், விஜயசாந்தியையும் இழுத்துப்போட்டால் நல்ல விளைவுகளை சந்திக்கலாம் என்று நினைக்கிறார்களாம் அவர்கள்.