சேலம்
சேலம் கோட்டை அழகிரி நாத பெருமாள் கோவிலில் கண்ணாடி மளிகை தரிசனம் நடைபெறுகிறது.

புரட்டாசி சனிக்கிழமை அனைத்து பெருமாள் கோவிலிலும் விசேஷ அலங்காரங்களும் தரிசனமும் உள்ளது வழக்கமாகும். திருப்பதி முதல் தென்னகக் குமரி வரை அனைத்து பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் என்பது சிறப்பான ஒன்றாகும்.
இதில் சேலம் நகரின் கோட்டை பகுதியில் உள்ள ஸ்ரீஅழகிரிநாதர் திருக்கோவிலும் உண்டு.
இந்த அழகிரி நாதர் திருக்கோவிலில் கண்ணடி மாளிகை தரிசனம் என்பது வெகு சிறப்பானதாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பக்கங்களிலும் அழகிய நிலைக்கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள மண்டபத்தின் நடுவே பெருமாளை எழுந்தருளச் செய்வது வழக்கமாகும்.
அனைத்து பக்கங்களிலும் நிலைக்கண்ணாடி உள்ளதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் பெருமாள் உருவம் தெரியும். இதன் மூலம் மக்கள் மனதில் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்பது புலப்படுவதாக ஐதீகம் உள்ளது.
இன்று புரட்டாசி மாத 2 ஆம் சனிக்கிழமை என்பதால் சேலம் கோட்டை ஸ்ரீஅழகிரிநாதர் கோவிலில் கண்ணாடி மாளிகை சிறப்பு தரிசனம் நடந்துள்ளது.
Thanx : Esan D Ezhil Vizhiyan
[youtube-feed feed=1]