மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவான் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், ஜெயிலுக்கு செல்வது குறித்து தயக்கம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் கடந்த 2007ம் ஆண்டு ரூ.25ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது  தொடர்பாக மும்பை காவல்துறை 70-க்கும் மேற்பட்டோர் மீது பதிவு செயது விசாரணை நடத்தி வந்தது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் சுரேந்திர அரோரோ மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்ஸி தர்மாதிகாரி, எஸ்.கே.ஷின்டே ஆகியோர் வழக்கில் குறிப்பிடத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதால், மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

காவல்துறை விசாரணையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டது. இந்த நிலையில், இந்த ஊழல் புகாரில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அப்போது மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்தார். அதுபோ, முன்னாள் துணை முதல்வராக இருந்த  அஜித் பவார் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரத்பவார், நான் சிறைக்கு அனுப்பப்பட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. என்னை சிறைக்கு அனுப்புங்கள். நான் இன்னும் சிறை அனுபவம் பெற்றதில்லை. யாரேனும் என்னைச் சிறைக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தால், அதை நான் வரவேற்கிறேன்.

நான் இந்த வங்கியில் உறுப்பினராகவும், முடிவு எடுக்கும் இடத்திலும் இல்லை என்ற நிலையில் என்னுடைய பெயரை இந்த வழக்கில் சேர்த்தமைக்காக அமலாக்கப் பிரிவுக்கு நன்றி தெரிவி்க்கிறேன்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை அன்று அமலாக்கத்துறையில் சரத் பவார் அணுக உள்ளதாகவும், மகாராஷ்டிரா ஒருபோதும் டெல்லி சிம்மாசனத்திற்கு தலைவணங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு  நடைபெற உள்ளது.  அங்கு காங்கிரஸ் கட்சியுடன்  சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து, போட்டியிடுகிறது.

இந்த சூழலில் சரத்பவார் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.