மதுரை:

துரை அருகே கூத்தியார்குண்டில் பெட்டிக்கடையில் பாதாம்பால் குடித்துக்கொண்டே திருடிய கொள்ளையன் தொடர்பான விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ராமர் என்பவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த 20ம் தேதி வழக்கம்போல் இரவு  11 மணிக்கு கடையை மூடிவிட்டு சென்ற நிலையில் 11.30 மணியளவில் கடையில் பின்பக்க தகரத்தை உடைத்து உள்ளே வந்த இரண்டு மர்ம நபர்கள் 25 நிமிடத்திற்கும் மேலாக கடை முழுவதும் டார்ச் லைட்டை அடித்து பணம் மற்றும் பொருட்களை தேடி வருகின்றனர்.

அப்போது,  கடையில் இருந்த பாதாம்பாலை எடுத்துக் குடித்துக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் முழுவதும் கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

கல்லாவிலிருந்த  3 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் கேஸ் அடுப்பு, பிஸ்கெட் பண்டல்கள், ஹார்லிக்ஸ் பாட்டில்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையடியது சென்றுள்ளனர்.

காலையில் கடையை திறந்த கடை உரிமையாளர் ராமர் பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரகு மற்றும் கண்ணன் என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ரகுவை கைது செய்துள்ள காவல்துறை தலைமறைவாக உள்ள கண்ணனை தேடி வருகின்றனர்.

மேலும் இந்த இருவர் மீதும் 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தகவல்: பொதிகை குமார்