சேலம்:
மேட்டூர் அணையிலிருந்து இன்று இரவு காவிரி ஆற்றில் வினாடிக்கு 60ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட உள்ளதால், காவிரி கரையோர மக்களக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளானர்.
ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அல்லது கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை கொட்டி வரும் நிலையில், காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நடப்பாண் டில், அதுவும் ஒரே மாதத்தில் 2முறை மேட்டூர் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளது.
இந்த நிலையில், இன்று இரவு மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கும் என மத்திய மத்திய ஜலசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணை ஏற்கெனவே நிரம்பியிருக்கும் நிலையில், நீர்திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மாவட்டங்களில் உரிய நடவடிக்கை எடுக்க 4 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக உயர்த்தப்பட்ட நிலையில், பிற்பகல் வினாடிக்கு 27,500 அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் 60ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.
தற்போதைய நிலையில் மேட்டூர் அணையில் இருந்து சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 20,000 கன அடியும், அணையின் 16 கண் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 7,500 கன அடியும் வெளியேற்றப் பட்டு வருகிறது. சுரங்க மின் நிலையங்களில் அதன் முழுஅளவு உற்பத்தியான 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.