சென்னை:
விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளார்,.
தமிழகத்தில் விக்கிரவாண்டி நாங்குனேரியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது.
விக்கிரவாண்டியில் போட்டியிட திமுக தரப்பில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்ட நிலையில், நேற்று விழுப்புரம் மாவட்ட பொருளாளர் புகழேந்தி விருப்ப மனு கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது. இதில் புகழேந்தியும் பங்குகொண்டார்.
விருப்ப மனு அளித்த 13 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் முடிவடைந்ததை தொடர்ந்து, வேட்பாளர் தேர்வு நடைபெற்றது. அதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதியின் திமுக வேட்பாளராக புகழேந்தி நிறுத்தப்படுவதாக ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி 20-8-1954 அன்று பிறந்தார். தற்போது 66 வயதை எட்டியுள்ள அவருக்கு 1970ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் மூன்று மகள்கள் உள்ளனர்.
கடந்த 1973ம் ஆண்டு திமுகவின் உறுப்பினராக சேர்ந்தார். தீவிர திமுக ஆதரவாளரான புகழேந்தி, தொடக்கத்தில் அத்தியூர் திரிவாதி கிளை செயலாளர், மாவட்டபிரதிநிதி , கோலியனூர் ஒன்றிய பொருப்பாளர் , பொதுக்குழு உறுப்பினர் , செயற்குழு உறுப்பினர், 2முறை ஒன்றியசெயலாளர் ,ஒருங்கினைந்தமாவட்ட பொருளாளர் ,மத்திய மாவட்ட பொருளாளர் 1986ம்ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் 1996 ஆம் ஆண்டு கோலியனூர் ஒன்றிய பெருந்தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.