சென்னை:

மிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு புதிய தலைவராக முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் மகள் ரூபா தேர்வாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதி மன்றம் தமிழ்நாடு கிரிக்கெட்சங்கத்துக்கு தேர்தல் நடத்தலாம் என்று அனுமதி வழங்கிய நிலையில், தேர்தல் தொடர்பான வேலைகள் சுறுசுறுப்படைந்துள்ளனர்.

ஏற்கனவே இருந்த தலைவர் என்.சீனிவாசன் மீது, சூதாட்ட புகார் கூறப்பட்ட நிலையில், அவர் தலைவர் பதவியில் போட்டியிடுவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அவர் பதவி விலக உச்சநீதி மன்றம் பணித்தது.

தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,  என்.சீனிவாசனின் இடத்தைப் பிடிக்க அவரது  வாரிசு ரூபா குருநாத் களமிறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், ரூபா தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளதாகவும், இதன் காரணமாக, பி.சி.சி.ஐ.யின் மாநில சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெயரை  ரூபா பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

ரூபா ஏற்கனவே, சீனிவாசனுடன் சிமென்ட் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முதன் முறையாக கிரிக்கெட்டுக்குள் காலடி எடுத்து வைக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வரும் திங்கட் கிழமை வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் நம்பப்படுகிறது.