சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 2017ம் ஆண்டு வாகனம் இல்லாத நிலையில், விதிமீறலுக்காக 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை 189 செல்லானை போக்குவரத்து துறை அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகரைச் சேர்ந்த சஞ்சு என்ற இளைஞர் காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் வாகனத்தில் பயணித்தபோது, விதி மீறி சென்றதாக போக்குவரத்து துறை சார்பில் கடந்த 2017 மற்றும் 2019 க்கு இடையில் 189 செல்லான் அனுப்பப்பட்டு உள்ளதாக ஜூலை 26 அன்று தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை 26 அன்று, பிரிவு 33-34ன் லைட் பாயிண்டில் தவறான யு-டர்ன் எடுத்ததற்காக போக்குவரத்து போலீசாரால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு ரூ .300 அபராதத்துடன் ஒரு செல்லான் வழங்கப்பட்டதாகவும், அதை எடுத்துக்கொண்டு அவர் சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தை அடைந்தபோது, இந்த நபரின் மோட்டார் சைக்கிளுக்கு எதிராக 189 செல்லன்கள் நிலுவையில் இருப்பதாக பதிவு காட்டியது. சி.சி.டி.வி.களில் பிடிபட்ட விதி மீறல்களின் அடிப்படையில் டி.வி.ஐ.எஸ் செல்லான்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்த நிலையில், இந்த செல்லான்கள் அனைத்தும் 2017-2019 காலப்பகுதியில் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கூறிய சஞ்சு, இந்த செல்லான்கள் குறித்து தனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றவர், கடந்த 2017 ம் ஆண்டில் தன்னிடம் இரு சக்கர வாகனமே இல்லை என்றும், கடந்த ஆண்டுதான் தான் இருசக்கர வாகனம் வாங்கியதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.