டில்லி:
இந்தியாவில் எழுந்துள்ள பொருளாதார குழப்ப நிலையை ‘Howdy, Modi’ நிகழ்ச்சி மூலம் மறைத்து விட முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆவேசமாக கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கையில், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று பல்வேறு வரிகளை குறைத்து அறிவித்தார்.
இதுகுறித்து கூறிய ராகுல் காந்தி, இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது என்றுறவர், பங்குச்சந்தையை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடியின் ‘மோடி நலமா’ (Howdy Mod) நிகழ்ச்சியையொட்டி இப்படியெல்லாம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுவது வியப்பு அளிக்கிறது என்றும் விமர்சித்து உள்ளார்.
ஹூஸ்டன் நிகழ்ச்சிக்காக ரூ.1.4 லட்சம் கோடி செலவிடுவதாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, இதுதான் இதுவரை உலகிலேயே மிகவும் ஆடம்பரமான நிகழ்ச்சி என்று விமர்சித்தவர், ஹவுடி மோடி நிகழ்ச்சி மூலம் இந்தியாவின் பொருளாதார குழப்பத்தை மறைத்து விட முடியாது என கூறி உள்ளார்.