டில்லி

ச்சநீதிமன்ற தீர்ப்பில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தால் தங்கச் செங்கற்களால் கோவில் கட்டுவோம் என இந்து மகாசபை தலைவர் சக்ரபாணி அறிவித்துள்ளார்.

பல வருடங்களாக அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பது குறித்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் நடந்துக் கொண்டு வருகிறது.    இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் முடிப்பதற்கு உச்சநீதிமன்றம் முடிவு  செய்துள்ளது.   ஆகவே உச்சநீதிமன்றம் ஒவ்வொரு நாளும் அதிக நேரம் மற்றும் சனிக்கிழமைகளிலும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்த விவகாரம் குறித்து முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா, ஆன்மீக குரு ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்ச் ஆகியோர் அடங்கிய மத்தியஸ்தர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.    இந்தக் குழு ஆலோசனை நடத்துவதை சில கட்சிகள் ஏற்றுக்  கொள்ளவில்லை..   ஆயினும் குழுவின் ஆலோசனை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்து மகாசபை தலிஅவர் சக்ரபாணி, “வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் அயோத்தி ராமர் கோவில் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   அந்த தீர்ப்பில் ராமர் கோவில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால் ராமர் கோவிலைச் சாதாரண செங்கல் கொண்டு கட்டாமல் தங்கச் செங்கற்களைக் கொண்டு கட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.