திருச்சி:

லங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் புறா மோதியது காரணமாக இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.  பின்னர் பழுது நீக்கப்பட்டு இன்று அதிகாலை மீண்டும் கொழும்புவுக்கு திரும்பிச் சென்றது.

கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வழக்கம்போல, நேற்று காலை 9.20 மணிக்கு  ஸ்ரீலங்கன் விமானம் வந்தது. விமானம் தரை இறக்கும் போது, அந்த வழியாக பறந்து வந்த புறா ஒன்று, அதன் இஞ்சின் பகுதியில் மோதியது. ஆனாலும், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விமானம் தரையிறங்கியது.

அதைத்தொடர்ந்து விமானத்தை ஆய்வு செய்த பைலட்,விமானம் மோதியதால், விமான இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விமானம் பழுது பார்க்கப்பட்டு, நீக்கப்பட்டது.

அதையடுத்து,  இன்று அதிகாலை 2,20 மணிக்கு மீண்டும் 62 பயணிகளுடன் கொழும்பு புறப்பட்டுச் சென்றது.