சென்னை:
தமிழகத்தில் ஆவின் பால் விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஆவின் தயாரிக்கும், தயிர், நெய், வெண்ணெய், பால் பவுடர் உள்பட பால் பொருட்களின் விலையை அரசு உயர்த்தி உள்ளது. இந்த புதிய விலை வரும் 18ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 19ந்தேதி ஆவின் பால் விலை மற்றும் பால் உற்பத்தியாளர் களுக்கான கொள்முதல் விலையை உயத்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனம் சார்பில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தயிர், நெய், வெண்ணெய், பால் பவுடர், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி,
பால் பவுடர் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.330 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல பால்கோவா கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.520 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.2 உயர்ந்து ரூ.27 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் நெய் லிட்டருக்கு ரூ. 35 அதிகரித்து ரூ.495 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் பன்னீரின் விலை ஒரு கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆகியுள்ளது. வெண்ணெய் அரை கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.240 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
விலை உயர்வு காரணமாக, பால் விலை உயர்வை குறிப்பிட்டுள்ளது தமிழக அரசு. இந்த புதிய விலை உயர்வானது வரும் புதன்கிழமை (செப்டம்பர் 18) முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.