சென்னை:
உள்துறைஅமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில், இந்தியா தொடர்ந்து ஒரு சுதந்திர நாடாக இருக்கும் என்பதை எங்களுக்கு நிரூபிக்க இப்போது நீங்கள் தடைபட்டுள்ளீர்கள் என்று அமித்ஷாவை சாடியுள்ளவர், நீங்கள் ஒரு புதிய சட்டம் அல்லது ஒரு புதிய திட்டத்தை உருவாக்கும் முன் மக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதையும் சுட்டிக்காட்டி பேசி உள்ளார். இறுதியில் வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் என்று கூறி முடித்து உள்ளார்.