உலக பில்லியர்ட்ஸ்(150-அப்) சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
மியான்மர் நாட்டில் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இத்தொடரின் ஃபைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானியும், மியான்மர் நாட்டின் நய் திவே ஓவும் மோதினர்.
இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பங்கஜ் அத்வானி, எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 22வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை பில்லியர்ட்ஸ் விளையாட்டில் வெல்கிறார் பங்கஜ்.
மேலும், 150-அப் பிரிவில் இவருக்கு இது 4வது சாம்பியன் பட்டம். கடந்த 6 ஆண்டுகளில் 150-அப் பிரிவில் இவர் பெறுகின்றன ஐந்தாவது பட்டம்.