டில்லி

பொதுத் துறை வங்கிகள் இணைப்பை எதிர்த்து வங்கி அதிகாரிகள் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

மத்திய அரசு சமீபத்தில் பொதுத்துறை வங்கிகளை இணைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.  அதன்படி மொத்தம் உள்ள 12 பொதுத்துறை வங்கிகள் இணைந்து  ஆறு வங்கிகளாகச் செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இதற்கு வங்கி ஊழியர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

அத்துடன் பொதுமக்களும் கடும் சிரமம் அடைவார்கள் எனவும் கூறப்படுகிறது.   தற்போது வங்கி அதிகாரிஅக்ள் சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இதை ஒட்டி வங்கி அதிகாரிகள் சங்கம் வங்கிகள் இணைப்பைக் கை விட வேண்டும் என அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளன.

அத்துடன் வரும் 26 மற்றும் 27 ஆம் தேதி அன்று வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.  தங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் வரும் நவம்பர் முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக வங்கி அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை அளித்துள்ளன.