சென்னை:
மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்ட மெட்ராஸ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி, அதை ஏற்க மறுத்து தனது ராஜினாமா கடிததத்தை குடியரசுத் தலை வருக்கும், உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பி உள்ள நிலையில், இன்று நீதிமன்றத் தில் வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ந்தேதி பதவி ஏற்ற நிலையில், தற்போது அவரை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றி கொலிஜியம் உத்தரவிட்டது.
இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். அவரை சென்னையில் இருந்து மாற்றி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பதை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு தஹில் ரமாணி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.
இநத் நிலையில், கொலிஜியம் முடிவை எதிர்த்து தனது தலைமைநீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு கடிதத்தி அனுப்பி வைத்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இதுவரை எந்தவித பதிலும் வராத நிலையில், அவர் இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.
இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்கின் விசாரணை பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், வழக்கு விசாரணை போன்ற எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்க வேண்டாம் என்று அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அவர் இன்று பணிக்கு வராத காரணத்தினால் பட்டியலிடப்பட்ட 75 வழக்குகளும் 2வது அமர்வில் நீதிபதி அக்னிஹோத்ரி அமர்வு விசாரிக்கிறது