சென்னை:
சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பதாதைகளோ, விளம்பர அட்டைகளோ அமைத்தால், அந்த நிறுவனத்துக்கு அபராதம் மற்றும் சிறை விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
இந்j நிலையில், சென்னை நகரில் மரங்களில் விளம்பரங்க்ள் செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறி விளம்பரம் செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விளம்பர தட்டிகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்ற தேவையற்ற பொருட்களை அமைக்கக் கூடாது.
விதிகளை மீறுபவர்களுக்கு ரூ .25 ஆயிரம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் தனியார் அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீது கடுமையான எடுக்கப்படும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மரங்களில் எவ்வித சேதாரமின்றி பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.