இஸ்லாமாபாத்:
உலக புகழ் பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் அப்துல் காதீர் காலமானார்.
தற்போது 63வயதாகும் அப்துல்காதீருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனையில் பரிசோதித்த அவர் உயிர் பிரிந்து விட்டதாக கூறியதாக, அவரது மகன் தெரிவித்து உள்ளார்.
அப்துல் காதீர், 1980 மற்றும் 1990ம் ஆண்டுகளில் மற்றைய இந்திய அணிகளுக்கு சவால் விடும் வகையில் சுழற்பந்து மூலம் மிரட்டி வந்ததவர். அப்போதைய காலத்தில், ஆசிய அணியில், பாகிஸ்தான் அணியில் மட்டுமே பல வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணியாக திகழ்ந்தது.
தற்போதைய பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான், அப்துல்காதீர், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் என வேகப்பந்து கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் அணியுடன், மோத மற்ற அணிகள் பயம் கொள்ளும் அளவுக்கு மிரட்டி வந்தது.
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமான போட்டியில் வக்கார் யூனிஸ் வாசிம் அக்ரம், இம்ரான் கான் அப்துல் காதீர் ஆகிய நால்வரும் தான் முதன்மைப் பவுலர்களாக களமிறங்கி மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது.
1977 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 1993 ஆம் ஆண்டு வரை 16 வருடம் விளையாடியவர் அப்துல் காதீர், பாகிஸ்தான் அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளிலும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 236 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 132 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
1993 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு அறிவித்தார். அதன்பிறகு பாகிஸ்தானில் அமைதியாக தனது ஓய்வுகாலத்தை கழித்து வந்தார்.