சென்னை:

ண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக சுமார் 36 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை  இயக்கப்படும் மாடி ரயில் சேவைகளில் 36 சேவை  ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக காலை 7.50 மணி முதல் பிற்பகல் 1.40 மணி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

அதன்பிறகு முதல் ரயில் மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு  முதல் ரயில் புறப்படும் என்றும் தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்து உள்ளது.

அதே வேளையில் வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு மதியம் 2.10 மணிக்கு ரயில் சேவை தொடங்கும் என்றும் அதன்பிறகு வழக்கம்போல ரயில்சேவை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது.