சென்னை:

ரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள எந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்களும், எந்த மாநிலத்தில்  உள்ள எந்தவொரு நியாயவிலை கடையிலும் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களும் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் பல மாநிலங்கள் இணைந்துள்ள நிலையில், தமிழகம் உள்படசில மாநிலங்கள் ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்தன.

இது தொடர்பாக கடந்த வாரம் டில்லியில் நடைபெற்ற மாநில உணவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக அமைச்சர் காமராஜ் கலந்துகொண்ட நிலையில், ஒரேநாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகமும் இணைவதாக தெரிவித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், இந்த திட்டத்தால், தமிழக மக்களுக்கோ, தமிழகத்துக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தமிக சட்டமன்ற கூட்டத்தொடரில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு ”ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் தற்போது செயல்பட்டு வரும் பொது விநியோக திட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அதே அமைச்சர், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகம் ஏற்றுக் கொள்கிறது என்ற வகையில் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.