பெல்லட் குண்டு விபத்த்தில் காயமடைந்துவிட்டதாக ஜானி சின்ஸ் புகைபடத்தை பகிர்ந்த இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பசீதின் டுவிட்டர் பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35Aஐ நீக்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் இந்த முடிவை கடுமையாக கண்டித்து, எதிர்ப்பு தெரிவித்தது. உலக நாடுகளிடம் இந்த விஷயத்திற்கு உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், யாரும் முன்வரவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா மட்டும் உதவியது.
இந்நிலையில், பெல்லட் குண்டு விபத்தால் காஷ்மீரை ஒருவர் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் பகிர்ந்துள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பார்ன் பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ள ஒரு ஆபாச படத்தில், ஜானி சின்ஸ் சிகிச்சை பெறும்போது டாக்டர் கட்டிபிடித்து அழுவதுபோல ஒரு காட்சியை படம் எடுத்து சமூக வலைதளத்தில் யாரோ கிண்டலாக பெல்லட் தாக்குதலில் காயம் அடைந்தவர் என்று பதிவிட்டுள்ளார். அதன் உண்மை தன்மையை அறியாத இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித், ரீட்வீட் செய்துள்ளார்.
இதை பார்த்த ஜானி சின்ஸ், ”புதிய பின்தொடர்பாளர்களை ஏற்படுத்தி கொடுத்தமைக்காக அப்துல் பசீதுக்கு நன்றி. நான் நலமாக உள்ளேன்” என்று கிண்டலடிக்கும் விதமாக அதை ரீ-டுவீட் செய்துள்ளார்.
இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதரின் இப்பதிவு, அதன் பின்னர் நீக்கப்பட்டுவிட்டாலும், சமூகவலைதளவாசிகள் அதன் ஸ்க்ரீன் ஷாட்களை டிரென்ட் செய்து வருகின்றனர்.