டில்லி :
நாடாளுமன்ற வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டில்லியில் உள்ள பாராளுமன்றத்திற்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் ஒருவர் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப் பட்டார்.
அவரை கைது செய்த காவல்துறையினர், நாடாளுமன்ற காவல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, அங்கு மேலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட உள்ளனர். பதற்றம் நிலவி வருகிறது.
Patrikai.com official YouTube Channel